சூப்பர் குட்ஸூடன் பட்டய கிளப்ப தயாராகும் விஜய்! |
இந்நிலையில் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் விஜய். இந்த படத்தை இயக்கப் போவது இயக்குநர் பாலாவின் பட்டறையிலிருந்து வரும் புதுமுக இயக்குநர். இவர் சொன்ன கதை விஜய்யை மிகவும் கவர்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சூப்பர் குட் பிலிம்ஸ் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சூப்பர் குட் பிலிம்ஸ் பேனரில் விஜய் நடித்து வெளிவந்த பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், லவ் டுடே, திருப்பாச்சி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. |
Wednesday, October 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment