தினம் தினம் பார்த்த தெக்குவீதி தேருதான்! திடீர்னு பெயிண்ட் அடிச்ச மாதிரி மினுமினுப்பு, ஜொலி ஜொலிப்பு! அது மாதிரிதான் இருந்தது அசினின் வரவு. மும்பைக்கு போனதில் இருந்தே தனது ஸ்டைலை முற்றிலும் மாற்றிக் கொண்ட அசின், காவலன் பட பிரஸ்மீட்டுக்கு வந்திருந்தார். எழுதி வைக்காத புரோட்டோக்கால் ஒன்று எப்போதும் உண்டு இங்கே. எந்த விழாவாக இருந்தாலும் கடைசியாகதான் ஹீரோ வருவார். முன்பே வந்திருந்து காத்திருப்பார்கள் நடிகைகள். ஆனால் இங்கே தலைகீழ். விஜய் வந்து சில நிமிடங்கள் கழித்துதான் வந்தார் அசின். போதுமா... என்று கேட்டு அனைவர் முகத்திலும் திருப்தி தெரிந்த பின்புதான் கிளம்பியது கிளி!
No comments:
Post a Comment